பிரதமர் மோடி பயணத்தால் வங்க தேசத்தில் கலவரம்! – இதுவரை 10 பேர் பலி!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (15:40 IST)
சமீபத்தில் பிரதமர் மோடி வங்க தேச சுதந்திர தினத்தில் கலந்து கொண்ட நிலையில் வங்காளத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்க தேசத்தின் 50வது ஆண்டு சுதந்திர தின விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இவ்விழாவில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி வங்க தேச சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்கு அந்நாட்டு இஸ்லாமிய அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் பிரதமர் மோடி விழா முடிந்து தாயகம் திரும்பி விட்ட நிலையிலும் இஸ்லாமிய அமைப்புகள் டாக்கா உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை அடைத்தும், இந்து கோவில்களை தாக்கியும் கலவரம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் போராட்டக்காரர்களை அடக்க ராணுவமும், காவல் துறையும் களமிறங்கியுள்ள நிலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொடர் வன்முறை சம்பவங்களால் வங்க தேசத்தில் பதட்டம் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்