சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்; ஆபத்தில் பொருளாதாரம்! – எகிப்து அதிபர் புதிய உத்தரவு!

திங்கள், 29 மார்ச் 2021 (10:01 IST)
எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலை மீட்கும் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் எகிப்து அதிபர் புதிய உத்தரவிட்டுள்ளார்.

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும், ஐரோப்பாவுக்கு இடையே போக்குவரத்துக்கு பெரும் பாலமாக இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 12 சதவீதம் இந்த வழித்தடத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கால்வாய் வழியே பயணித்த எவர்கிவன் என்ற சரக்குக்கப்பல் கால்வாயின் குறுக்கே கிடைமட்டமாக சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கப்பல் சிக்கிய பகுதிகளில் மணலை தோண்டி ஆழப்படுத்தி பின்னர் இழுவை படகுகளை கொண்டு கப்பலை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போக்குவரத்து பாதிப்பை சமாளிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள எகிப்து அதிபர் உத்தரவிட்டுள்ளார். கப்பலில் சுமார் 18 ஆயிரம் கண்டெய்னர்கள் உள்ள நிலையில் அவற்றை அப்புறப்படுத்திவிட்டு கப்பலை நகர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்