வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

Siva

வியாழன், 3 ஏப்ரல் 2025 (12:32 IST)
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வக்பு நிலத்தை அபகரித்ததாக பாஜக அமைச்சர் குற்றம் கூறிய நிலையில், மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
வக்பு சட்டத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வக்பு வாரிய நிலத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அபகரித்ததாக பாஜக எம்பி அனுராக் கூறியுள்ளார். 
 
இதற்கு பதிலளித்த கார்கே, "எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அனுராக் தாக்கூர் பேசியுள்ளார். எனக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்கப்பட்டால், நான் எனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
 
இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார்கேவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்பிக்கள் மாநிலங்களவையில் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவில் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்திருப்பது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்