எவர்கிவன் கப்பல் சிக்கியது மனித தவறால்... சூயஸ் கால்வாய் தலைமை அதிகாரி தகவல்!

திங்கள், 29 மார்ச் 2021 (09:01 IST)
சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிவன் இயற்கையின் தாக்கத்தில் சிக்கவில்லை என சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைமை அதிகாரி ஒசாமா ரபி தெரிவித்துள்ளார். 

 
எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும், ஐரோப்பாவுக்கு இடையே போக்குவரத்துக்கு பெரும் பாலமாக இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 12 சதவீதம் இந்த வழித்தடத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கால்வாய் வழியே பயணித்த எவர்கிவன் என்ற சரக்குக்கப்பல் கால்வாயின் குறுக்கே கிடைமட்டமாக சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் கப்பல் சிக்கிய பகுதிகளில் மணலை தோண்டி ஆழப்படுத்தி பின்னர் இழுவை படகுகளை கொண்டு கப்பலை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது மனிதர்களின் தவறாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்றும் இயற்கையின் தாக்கம் இதில் இல்லவே இல்லை என்றும் சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைமை அதிகாரி ஒசாமா ரபி தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக காற்று பலமாக வீசியதால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து தரை தட்டியதாக சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்