மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

Siva

வியாழன், 3 ஏப்ரல் 2025 (14:20 IST)
மருதமலை முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் நிலையில் இன்று வெள்ளி வேல் திருடு போய்விட்டதாக தகவல் வெளியானது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில் கோவில் நிர்வாகம் இந்த செய்தி குறித்து மறுப்பு தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில், கோவை மண்டல இணை ஆணையர் ப. ரமேஷ் வெளியிட்டிருக்கும் மறுப்புச் செய்தியில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழக்கு நடைபெறவிருக்கும் நிலையில், ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருடப்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.
 
கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மருதமலை அடிவார வேல் கோட்ட தியான மண்டபத்தில் நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் 3 கிலோ, 100 கிராம் எடையுள்ள வெள்ளிவேல் கயவர்களால் களவாடப்பட்டுள்ளது. இது தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபம். 
 
இதன் நிர்வாகியாக குருநாதசாமி என்பவர் இருந்து வருகிறார். இந்த தியான மண்டபத்தில் வெள்ளிவேல் மட்டுமே இருந்து தியானம் செய்யப்பட்டு வந்துள்ளது. மேற்கண்ட தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை. மேலும் இந்த சம்பவம் மருதமலை முருகன் கோயிலில் நடைபெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது 

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்