ராமேஸ்வரத்தில் சிக்கிய தோட்டாக்கள் ; வந்தேறி மாடுகளின் வேலை : ஹெச்.ராஜா புதிய கண்டுபிடிப்பு

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (13:48 IST)
ராமேஷ்வரத்தில் உள்ள அந்தோனியார் புரத்தை சேர்ந்தவர் மீன்வர் எடிசன், இவர் தனது வீட்டின் கழிவறைக்கு செப்டிக் டேங்கை கட்டுவதற்காக நேற்று ஊழியர்களை அழைத்துள்ளார். 

 
அந்த ஊழியர்கள செப்டிக் டேங்க் கட்டுவதற்காக 5 அடி குழி தோண்டியுள்ளனர். அப்போது அந்த குழிக்குள் பெட்டி பெட்டியாக தூப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் பழைய தோட்டாக்கள் இருந்துள்ளது. மேலும், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கையெறி குண்டுகள், ஏகே 47 ரக துப்பாக்கிகள், டெட்டனேட்டர்கள் மற்றும் வயர்கள் கிடைத்தன. இது குறித்து எடிசன் அங்குள்ள காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
 
அதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தோட்டாக்களை கைப்பற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  
 
1980களில் ராமேஸ்வரம் கடலோர பகுதியில் இலங்கை போராளிகள் முகாம் அமைத்து ஆயுத பயிற்சியில் ஈடுபட்ட போது அவை புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஹெச்.ராஜா “இராமேஸ்வரத்தில் அந்தோணியார்புரத்தில் எடிசன் என்பவர் வீட்டில் தோண்ட தோண்ட நவீன ஆயுதங்கள். தூத்துக்குடியில் நடந்தது நக்சல், சர்ச் கூட்டணியின் பரிமாணம். அது தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள "வந்தேறி மாடுகள்" உடனடியாக அடையாளம் காணப்படவேண்டும். உளவுத்துறைக்கு சவால்” என பதிவிட்டுள்ளார்.
 
இதைக்கண்ட நெட்டிசன்கள் தூத்துக்குடிக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? ஏன் வீணாக மத கலவரங்களை தூண்டி விடுகிறீர்கள்? என அவரை வச்சு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்