தஞ்சம் புகுந்த அகதிகளை பாலைவனத்திற்கு விரட்டிய அல்ஜீரியா

செவ்வாய், 26 ஜூன் 2018 (13:23 IST)
கர்ப்பிணி பெண்கள் உள்பட 13,000 அகதிகளை சஹாரா பாலைவனத்தில் அல்ஜீரியா நாடு கைவிட்டதாக அந்நாட்டு மீது குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.

 
அல்ஜீரியா நாட்டில் தஞ்சம் புகுந்த சுமார் 13,000 அகதிகளை உணவு மற்றும் தண்ணீர் இன்றி சஹாரா பாலைவனத்திற்கு துரத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு அல்ஜீரியா மறுப்பு தெரிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக வெளியாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் அகதிகள் பாலைவனத்தில் தவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. உணவு மற்றும் தண்ணீர் இன்றி பலர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மீட்பு குழுவினர் அகதிகளை மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அல்ஜீரியா 2017ஆம் ஆண்டு முதல் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈருபட்டு வருசது குறிப்பிடத்தக்கது. 
 
இதுவரை அல்ஜீரியா தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றிய அகதிகளை எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. இருப்பினும் கடந்த ஓராண்டில் மட்டும் வெளியேற்றப்பட்ட அகதிகளின் எண்ணிகை 2,88 என அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்