மழைக்காலத்தில் தலைமுடியை பராமரிக்கும் வழிகள்!

உங்கள் தலைமுடி எந்த வகை என்பதை முதலில் தெரிந்து கொண்டு அதன் பின் அதற்கேற்ற வாரம் ஒரு முறை எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொள்ள வேண்டும். மழையில் நனைந்த பின் துடைக்காமல் ஈரத்துடன் இருந்துவிட்டால் தலை அரிக்கும். பாக்டீரியா, ஃபங்கள் தொற்று அல்லது பொடுகுப் பிரச்சனைகள்  ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 
ஈரப்பதமிக்க முடி சேதமடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே முடி காயும் வரை, சீப்பை பயன்படுத்தக் கூடாது.
 
தலையின் இயற்கையான ஈரப்பதம் கெடாமல் அதே சமயம் தலைமுடி வறண்டு போகாமல் இருக்க அதற்கேற்ற தரமான எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர்  ஆகியவற்றைப் பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
 
மழை காலத்தில் மயிர்கால்கள் சுத்தமாக இல்லை என்றால் அதிகபடியாக ஈரப்பசையால் அரிப்புகளுடன், துர்நாற்றத்தை ஏற்படுத்தும். வாரத்திற்கு இரண்டு  மூன்று முறை ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் அழுக்கு சேர்வதை தவிர்க்கலாம்.
 
நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு, மழை காலத்தில் உங்கள் முடியின் எண்ணெய் பசையை குறைப்பதாக இருக்க வேண்டும். இல்லை எனில், இவை இன்னும்  முடியின் எண்ணெய் பசை அதிகரித்து துர்நாற்றத்தை அதிகரிக்க செய்யும். எனவே இயல்பாகவே எண்ணெய் பசை கொண்டவர்கள், மைல்டு ஷாம்புவை  பயன்படுத்த வேண்டும்.
 
அதிலும் ஷாம்புவிற்கு பதிலாக நெல்லிகாய், வெந்தயம், சீகைக்காய், செம்பருத்தி பூ மற்றும் இலை போன்றவற்றை கொண்டு கூந்தலை பராமரிப்பது இன்னும் சிறந்தது. இது இயற்கையை உங்கள் முடியின் எண்ணெய் பசையை அகற்றும்.
 
முடிந்த வரை இயற்கை ஹேர் கண்டிஷனர்களையே எப்போதும் தேர்வு செய்யுங்கள். அதிலும் எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா அல்லது ஆப்பிள் சீட் வினிகர்  போன்றவற்றை பயன்படுத்தி கூந்தலை அலசுவது இன்னும் சிறந்தது.
 
தலைக்கு குளிக்க முடிந்த வரை வெந்நீரை தவிர்த்திடுங்கள். உங்கள் முடிகளை மட்டுமாவது குளிந்த நீரால் அலசுங்கள். இது உங்கள் முடி உதிர்வதை குறைக்க  உதவுகிறது. மேலும் நீங்கள் குளித்து முடித்த உடன், தலை முடியை நன்கு உலர்த்துவது அவசியம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்