பல ஆண்டுகளுக்கு பிறகு வில்லன் வேடம் ஏற்கும் கமல்?

Webdunia
புதன், 31 மே 2023 (15:38 IST)
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் ப்ராஜெக்ட் கே. இந்த படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இந்த படத்தில் முக்கியமான ரோல் ஒன்றில் நடிக்கிறார், இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். 20 நாட்கள் நடிப்பதற்கு சுமார் 150 கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.

கமல்ஹாசன் தனது திரைவாழ்வின் ஆரம்பத்தில் இருந்தே கதாநாயகனாகவே நடித்து வந்தார். சில படங்களில் மட்டுமே எதிர்கதாநாயகனாக நடித்துள்ளார். கடைசியாக சிவப்பு ரோஜாக்கள் போன்ற படங்களில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இப்போது பிராஜக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்திருப்பதால் ஏன் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது கேள்வியாக எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்