இப்படத்தில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில், இப்படப்பட ஷூட்டிங்கின்போது, ஒரு சண்டை காட்சியில், அமிதாப் பச்சனுக்கு விபத்து ஏற்பட்டது.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வலது விலா எலும்பில் முறிவும், தசை நார்கள் கிழிந்ததாகக் கூறி, அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில், இன்று அவர் தன் சமூக வலைதளைத்தில்,' மூச்சுவிடும்போது, நடக்கும்போது வலியேற்படுகிறது. இயல்புநிலைக்கு வர இன்னும் சில வாரங்கள் ஆகும். உங்களின் பிரார்த்தனைகளின் மூலம் நான் குணமடைந்து வருகிறேன்' என்று கூறியுள்ளார்.