விஷாலின் மார்க் ஆண்டனி பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (08:55 IST)
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விபத்துக்குள்ளானது. கிரேன் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து படப்பிடிப்புத் தளத்துக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து பட குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், ஏப்ரல் 27 ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்