உலகம் முழுவதும் படத் தயாரிப்பு முறைகள் தற்போது மாறி வருகின்றன. தயாரிப்பாளர் கிடைக்காத அறிமுக இயக்குனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் உதவியால் கிரவுட் பண்டிங் மூலமாக சிறிய பட்ஜெட்டில் படங்களை எடுப்பது தற்போது அதிகமாகியுள்ளது. அப்படி எடுத்த லூசியா உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்று பல இளம் இயக்குனர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளன.