அட்வான்ஸ் வாங்கி பல வருஷம் ஆச்சு… தயாரிப்பாளரை டீலில் விடும் விஷால்!

திங்கள், 24 ஏப்ரல் 2023 (14:17 IST)
இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

ஆனால் அந்த பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இப்போது பாண்டிராஜ், விஷாலுக்காக கதை ஒன்றை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்பாக அவர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க ஆசைப்பட்டு, அவரிடம் சென்றதாகவும், ஆனால் அவரிடம் இருந்து பாஸிட்டிவ்வான ரியாக்‌ஷன் எதுவும் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

விஷால் பாண்டிராஜ் இணையும் படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. ஏற்கனவே விஷாலுக்கு கதிரேசன் முன் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து வைத்துள்ளார். ஆனால் இப்போது அந்த படத்தை பண்ணினால் பழைய சம்பளமே கிடைக்கும் என விஷால் வேறு தயாரிப்பாளர் பக்கம் செல்வதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்