யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

Siva

புதன், 16 ஜூலை 2025 (18:06 IST)
நடிகர் சூர்யா வரும் ஜூலை 23ஆம் தேதி தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். ஒவ்வொரு பிறந்த நாளையும் அவர் மிகவும் எளிமையாக, தனது குடும்பம் மற்றும் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களை மட்டும் அழைத்துக் கொண்டாடுவார். ஆனால், இது 50-வது பிறந்தநாள் ஸ்பெஷலாக, அவர் நான்கு நாட்கள் தனது பிறந்த நாளைக் கொண்டாட திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இரண்டு நாட்கள் கோவாவிலும், அங்கு நடக்கும் பார்ட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் திரையுலக நண்பர்களை அழைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், இரண்டு நாட்கள் சென்னையில் பிறந்தநாள் பார்ட்டி நடக்க இருப்பதாகவும், அதில் கோலிவுட் திரையுலக நண்பர்களுக்கு பார்ட்டி அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
"என்னதான் ஒரு பெரிய நடிகராக இருந்தாலும், யாராவது தன்னுடைய பிறந்தநாளை நான்கு நாட்கள் கொண்டாடுவார்களா?" என்ற கேள்வியை சூர்யாவின் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். எனவே, இந்தச் செய்தி வதந்தியாகத்தான் இருக்கும் என்றும், "சூர்யா எப்போதுமே எளிமையை விரும்புபவர், இந்த அளவுக்கு ஆடம்பரமாக நான்கு நாட்கள் எல்லாம் பார்ட்டி வைத்து பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் அவரிடம் இல்லை" என்றும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்