23 ஆவது ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம்.. ஷாலினி வெளியிட்ட ரொமாண்டிக் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (08:50 IST)
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த ஷாலினி குடும்பப் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். அதில் அவர் பகிரும் புகைப்படங்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

இதையடுத்து இப்போது தங்களது 23 ஆவது ஆண்டு திருமண நாளை நேற்று அஜித் மற்றும் ஷாலினி தம்பதிகள் கொண்டாடினார். அதையடுத்து இருவரின் ரொமாண்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்