'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி பிரியா, சிம்புவை திருமணம் செய்யப்போவதாக ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவிய நிலையில், "இதை ஒரு புது செய்தி போல், அன்றே சொன்னோம்" என்று தங்களுக்கு தாங்களே புகழ்ந்து கொள்ளும் யூடியூபர்கள் இன்று கூறியுள்ளது பார்த்து நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோமதி பிரியா, 'விண்ணைத்தாண்டி வருவாயா' த்ரிஷா போல் காஸ்டியூம் அணிந்து, "ஜெஸ்ஸி இங்கே இருக்கிறேன், கார்த்திக்கை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்" என்று கேப்ஷனுடன் பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து, சிம்புவுடன் கோமதி பிரியாவுக்குக் காதலா? இருவரும் திருமணம் செய்யப் போகிறார்களா? என்ற வதந்தி கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தங்களைத் தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், இந்த செய்தியை இன்று தெரிவித்து "இது ஒரு வதந்தி" என்று கூறியுள்ளனர். இந்த வீடியோவின் கமெண்ட்ஸ் பிரிவில், "ஒரு வார பழைய செய்தியை சொல்வதற்கா இத்தனை பில்டப்பா?" என்று பதிவிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.