ஹரி – விக்ரம் இணைந்த படத்தோட பெயர் என்னனு தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (18:32 IST)
ஹரி இயக்கவுள்ள ‘சாமி’யின் இரண்டாம் பாகத்துக்கு, புதிதாக ஒரு பெயர் வைத்துள்ளனர்.


 
 
ஹரி இயக்கத்தில், விக்ரம் – த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. போலீஸ் அதிகாரியாக விக்ரம் நடித்த இந்தப் படம், சூப்பர் டூப்பர் ஹிட். எனவே, இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை நேற்று தொடங்கியுள்ளார் ஹரி. த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ஹீரோயினாக நடிக்கின்றனர். வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
 
பொதுவாக, ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது, அந்தப் படத்தின் பெயருக்குப் பின்னால் ‘2’ என சேர்த்துக் கொள்வார்கள். ஆனால், இந்தப் படத்தில் அப்படிச் சேர்க்கவில்லையாம் ஹரி. ‘சாமி 2’ என்பதற்குப் பதிலாக ‘சாமி ஸ்கொயர்’ எனப் பெயர் வைத்துள்ளாராம்.
 
சூர்யா நடித்த ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சிக்கு 2, 3 எனப் பெயர் வைத்ததால்தான், முதல் பாகம் பெற்ற அளவுக்கு அடுத்த இரண்டு பாகங்களும் வெற்றி பெறவில்லை என நினைக்கிறாராம் ஹரி. எனவே, செண்டிமெண்ட் காரணமாக இப்படி வைத்துள்ளார் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்