சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

Siva

வியாழன், 26 ஜூன் 2025 (18:18 IST)
சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில், தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' படத்தின் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் இணையவுள்ளதாக வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்பு-வெற்றிமாறன் படம் உறுதியான நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், 'வடசென்னை' படத்தில் நடித்த ஆண்ட்ரியா, கிஷோர், மற்றும் சமுத்திரக்கனி ஆகிய மூன்று கதாபாத்திரங்களும், சிம்பு-வெற்றிமாறன் படத்தில் அதே கதாபாத்திரங்களாகவே இணைகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இந்த படம்தான் உண்மையான 'வடசென்னை 2' ஆக இருக்குமோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது. இது தனுஷ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே 'வடசென்னை 2' படத்தில் தனுஷ் நடிப்பதாகவும், ஐசரி கணேஷ் அதை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது தனுஷுக்கு பதில் சிம்பு மாறிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், வெற்றிமாறன் தரப்பிலிருந்து, "இந்த படம் 'வடசென்னை 2' கிடையாது, தனுஷ் நடிக்கும் படம்தான் 'வடசென்னை 2'" என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், தனுஷ் தரப்புக்கு ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை என்றும், இதனால் தனுஷ் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்