அடல்ட் படங்களில் நடிப்பாரா விஜய் சேதுபதி?

வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (15:13 IST)
விஜய் சேதுபதி, அடல்ட் படங்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


 

 
‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’வைத் தொடர்ந்து அடல்ட் காமெடிப் படமான ‘ஹர ஹர மஹாதேவஹி’ இன்று ரிலீஸாகியிருக்கிறது. அடுத்ததாக, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, ‘வெர்ஜின் மாப்பிள்ளை’ போன்ற அடல்ட் படங்கள் உருவாக உள்ளது. எப்படி பேய்ப் படங்கள் வெற்றிபெற்ற பிறகு, தொடர்ந்து பேய்ப் படங்களாக எடுத்தார்களோ… அதேமாதிரி அடல்ட் படங்கள் வரும் காலங்களில் கோடம்பாக்கத்தை குத்தகைக்கு எடுத்துக் கொள்ளும் போலிருக்கிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், விஜய் சேதுபதி மாதிரியான பொறுப்புள்ள நடிகர்களும் அந்தப் படத்தில் நடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

‘அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், நீங்கள் அடல்ட் படங்களில் நடிப்பீர்களா?’ என விஜய் சேதுபதியிடமே நேரடியாகக் கேட்டுவிட்டனர் பத்திரிகையாளர்கள். “நான் அந்த மாதிரி படங்கள்ல நடிக்க மாட்டேன்னு இப்போ சொல்லலாம். ஆனால், இப்போது எதுக்குமே உத்தரவாதம் கொடுக்க முடியாது. இது வாய்தானே… பின்னாடி எப்படியெல்லாம் பேசுமோ…” என்று பதிலளித்துள்ளார் விஜய் சேதுபதி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்