என்னதான் ஒரே வீட்டில் இரண்டு நடிகர்கள் இருந்தாலும், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். அதுவும், கணவன் – மனைவி, அப்பா – மகன்/மகள் உறவாக இருந்துவிட்டால், ஒன்றாக நடிக்க மாட்டார்கள்.
அப்படியே நடித்தாலும், நிஜ உறவைப் போன்ற கேரக்டரில் நிச்சயம் நடிக்க மாட்டார்கள். ஆனால், அரிதாக எப்போதாவது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்.
அப்படித்தான் கார்த்திக் – கெளதம் கார்த்திக் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். அதுவும் அப்பா – மகனாக… திரு இயக்கும் இந்தப் படத்தை, தனஞ்செயன் தயாரிக்கிறார். கார்த்திக் அரசு அதிகாரியாகவு, கெளதம் கார்த்திக் பாக்ஸராகவும் நடிக்கின்றனர்.