ராதாரவியுடன் விஜய் திடீர் சந்திப்பு! திடீர் அரசியல் முடிவா?

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (18:45 IST)
திரைத்துறையின் வேலைநிறுத்தம் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் நிலையில் சிறப்பு அனுமதி பெற்று சமீபத்தில் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படப்பிடிப்பின்போது விஜய்யும் ராதாரவியும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது டுவிட்டரில் வெளியாகி டிரெண்டில் உள்ளது. 'தளபதி 62' படத்தில் ராதாரவி அரசியல்வாதி வில்லனாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் ராதாரவி சமீபத்தில் திமுகவில் இணைந்து தீவிர அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் ராதாரவியுடன் விஜய் அரசியல் குறித்து பல விஷயங்கள் பேசியதாகவும் கூறப்படுகிறது.

கோலிவுட் திரையுலகில் இருந்து பலர் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதித்து வரும் நிலையில் விஜய்யின் பார்வையும் அரசியல் பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்