விடாமுயற்சி திரைப்படம் தோல்வி அடைந்தாலும், அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே குட் பேட் அக்லி என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை அஜித் கொடுத்துள்ளதால், தற்போது அஜித்துக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் தர கூட தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர்.
ஆனால், விடாமுயற்சி படத்தின் தோல்வியால், ஒரு மிகப்பெரிய படத்தை இயக்கும் வாய்ப்பை மகிழ்திருமேனி இழந்துள்ளதாகவும், தற்போது அவரை நம்பி படம் கொடுக்க எந்த ஹீரோவும் தயாரிப்பாளரும் முன் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடந்த நேரத்தில், அமிதாப்பச்சனை நேரில் சந்தித்த மகிழ் திருமேனி, ஒரு கதையை கூறியதாகவும், அவர் கதை சொல்லும் பாணியே வித்தியாசமாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க அமிதாப் ஒப்பு கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், விடாமுயற்சி படத்தின் தோல்வி மற்றும் அஜித்திடம், அவரை பற்றி விசாரித்து தெரிந்து கொண்ட சில விஷயங்கள் காரணமாக, மகிழ் திருமேனி படத்தை அமிதா டிராப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், தற்போது அவர் வேறு பெரிய நடிகர்களை சந்தித்து கதை கூற முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் அவரிடம் யாரும் கதை கேட்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. மகிழ்திருமேனியின் கதை சொல்லும் பாணி நன்றாக இருந்தாலும், அவரது ஆட்டிட்யூட், குறிப்பாக ஹீரோக்களை மதிப்பதில்லை என்பதுதான், அவருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்க தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.