சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

Siva

புதன், 23 ஏப்ரல் 2025 (19:44 IST)
தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் தொடர் வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த சிறுத்தை சிவா, ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த மற்றும் சூர்யா நடித்த கங்குவா ஆகிய இரண்டு படங்களின் தோல்வி காரணமாக தற்போது அடுத்த பட வாய்ப்பு இல்லாமல் உள்ளார். 
 
இதனை அடுத்து, அவர் சென்னையில் வைத்திருந்த ஆபீசை காலி செய்து விட்டதாகவும், கோலிவுட்டை விட்டு அவர் செல்ல இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கார்த்தி நடித்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான சிறுத்தை சிவா, வீரம்,, வேதாளம், விசுவாசம் ஆகிய தொடர் வெற்றி படங்களை இயக்கினார். விவேகம் படம் சுமாரான வெற்றி பெற்ற நிலையில், அண்ணாத்த மற்றும் கங்குவா ஆகிய இரண்டு படங்கள் படுதோல்வி அடைந்தன. இதனை அடுத்து, பெரிய ஹீரோக்களிடம் அவர் கதை சொன்ன நிலையில், அவரை நம்பி யாரும் படம் கொடுக்க தயாராக இல்லை என்பது போல் தெரிகிறது.
 
இதனை அடுத்து, சென்னையில் உள்ள முக்கிய பகுதியில் பல ஆண்டுகளாக அலுவலகம் வைத்திருந்த சிறுத்தை சிவா, தற்போது அதை காலி செய்து விட்டதாகவும், தெலுங்கு அல்லது கன்னட திரைய்லக பக்கம் செல்லலாம் என்று திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்