விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு பிரிட்டன் விருது: படக்குழுவினர் மகிழ்ச்சி

வியாழன், 29 மார்ச் 2018 (22:14 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் டீசர், டிரைலர் உலக அளவில் சாதனை செய்தது. அதேபோல் வசூலிலும் ரூ.200 கோடியை தாண்டியது. இந்த  நிலையில் பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவில் மெர்சல் சிறந்த வெளிநாட்டு படம் என்ற விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இன்று லண்டனில் நடைபெற்ற பிரிட்டனின் 4வது தேசிய திரைப்பட விழாவில், ‘மெர்சல்’திரைப்படத்துக்கு இந்த விருதை விழாக்குழுவினர் அறிவித்தனர். இந்த விருது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

ஏற்கனவே லண்டனில் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வசூலை பெற்ற தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்