புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

Siva

புதன், 23 ஏப்ரல் 2025 (19:58 IST)
தமிழ் சினிமாவில் எந்த ஒரு புதிய ட்ரெண்ட் கொண்டு வந்தாலும், அது கமல்ஹாசன் அறிமுகம் செய்யப்பட்டதாக தான் இருக்கும். அவர் தான் முதன் முதலில் பல தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தார். என்பதும் அது மட்டும் இன்றே, வெளிநாடுகளில் தமிழ் சினிமாவின் வியாபாரத்தை முதன்முதலாக விரிவுபடுத்தியதும் கமல்ஹாசன் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், தற்போது தமிழ் திரைப்படங்களின் ப்ரோமோஷன் விழாக்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டில் நடக்கின்றன. ஒரு சில விழாக்கள் மட்டும் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய பகுதிகளில் நடக்கின்றன. இந்த நிலையில், முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் தாண்டி, தக்லைப் படத்தின் ப்ரோமோஷனை செய்ய கமல் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
தக்லைப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவில் நடைபெற திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், அங்குள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இதன் மூலம், இனிவரும் காலத்தில் தமிழ் சினிமா ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆகும் என்றும், இந்த புதிய ட்ரெண்டையும் ஆரம்பித்து வைப்பது கமல்ஹாசன் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்