‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் படம் ‘ஜுங்கா’. ‘வனமகன்’ சயிஷா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தை, விஜய் சேதுபதியே தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள், பாரீஸில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜார்ஜியா மற்றும் அஜர்பெய்ஜன் ஆகிய இரண்டு நாடுகளிலும் ஷூட்டிங் நடைபெறுகிறது. கிளைமாக்ஸ் மற்றும் ஒரு பாடலை இங்கு படமாக்க இருக்கின்றனர். அடுத்த வாரம் வரை அங்கு ஷூட்டிங் நடைபெறும் எனத் தெரிகிறது.