விஜய் 68 படத்தின் கதைக்களம் இதுவா?... தீயாய் பரவும் தகவல்!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (07:24 IST)
லியோ படத்துக்குப் பிறகு விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தில் பணியாற்றும் பிறக் கலைஞர்கள் பற்றிய விவரம் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.  இந்நிலையில் இப்போது படத்தின் ஆடியோ உரிமையை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான டி சீரிஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் கதைக்களம் வருமான வரித்துறையை சுற்றி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் விஜய் வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் சமூகவலைதளத்தில் சில நாட்களாக வைரலாக பரவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்