ரசிகர்கள் கமெண்ட்ஸ்… மாமன்னன் கவர் போட்டோவை நீக்கிய பஹத் பாசில்!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (07:20 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவினரே அறிவித்துள்ளனர். இந்த படத்தில் வடிவேலு நடித்திருந்த மாமன்னன் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படம் ஓடிடியில் வெளியான சமயம் படத்தில் வில்லனாக நடித்திருந்த பஹத் பாசில் கதாபாத்திரத்தின் பில்ட் அப் காட்சிகள் எடிட் செய்யப்பட்டு அதில் சாதி புகழ்பாடும் பாடல்களை இணைத்து பலரும் பரப்ப, அது வைரல் ஆனது.

இதையடுத்து தன்னுடைய முகநூலில் இந்த படத்தின் புகைப்படங்களை கவர் போட்டோவாக வைத்தார் பஹத் பாசில். ஆனால் அதில் கமெண்ட்ஸ் செக்‌ஷனில் சென்று ரசிகர்கள் அந்த வீடியோக்களை இணைத்தும், பல கமெண்ட்களை செய்தும் வந்த நிலையில் இப்போது தன்னுடைய கவர் புகைப்படத்தை நீக்கியுள்ளார் பஹத் பாசில்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்