கோட் படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபுவின் அடுத்த படம் என்ன தெரியுமா?

vinoth
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (14:57 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

இந்த படம் இதுவரை 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. இப்படி ஒரு மெகா பிளாக்பஸ்டர் கொடுத்துள்ள வெங்கட்பிரபு, அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் சிவகார்த்திகேயன் தற்போது தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் வெங்கட்பிரபுவுக்கு தேதிகள் கொடுக்க இன்னும் ஒரு வருடத்துக்கு மேலாகும் என சொல்லப்படுகிறது.

அதனால் அந்த இடைப்பட்ட காலத்தில் வெங்கட்பிரபு தன்னுடைய ஹிட் படமான சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மிகக் குறுகிய கால படமாக இதை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்