மீண்டும் தொடங்கிய ரஜினிகாந்தின் ‘கூலி’ ஷூட்டிங்!

vinoth
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (14:51 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம்  ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படும் சமீபத்தில் படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா இணைந்தார். இவர் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்தோடு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஷூட்டிங் நடந்த விசாகப்பட்டிணம் பகுதியில் கனமழை பெய்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது மழை குறைந்துள்ள நிலையில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்