விஜய்ய எல்லோரும் மிஸ் பண்ணுவோம்… வருத்தத்தைப் பதிவு செய்த பிரபுதேவா!

vinoth

செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (14:36 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் வசூலில் கலக்கி வருகிறது. நான்கு நாட்களில் உலகம் முழுபதும் 288 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் தருணங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்திருக்கும் நிலையில் கேரளா, ஆந்திரா மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அரசியலுக்கு செல்ல இருக்கும் விஜய் குறித்து பேசியுள்ள சக நடிகர் பிரபுதேவா “விஜய் ஒரு எண்டர்டெயினர். அவர் டான்ஸ், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் கலக்குவார். கண்டிப்பாக அவர் அரசியலுக்கு சென்றதும் அவரை நாம் மிஸ் பண்ணுவோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்