ஒரே நாளில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் சூரியின் மாமன்!

vinoth

சனி, 28 ஜூன் 2025 (10:47 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.

இதையடுத்து அவரின் அடுத்த படமாக ‘மாமன்’ மே 16 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் மற்றும் லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தாய்மாமன் உறவை மையப்படுத்தி நெஞ்சைக் கசக்கி பிழியும் படமாக மாமன் இருந்தது. இந்த படம் சென்னையைத் தாண்டி நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

திரையரங்குகளில் ரிலீஸாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் ‘மாமன்’ திரைப்படம் ஓடிடியில் இதுவரை ரிலீஸாகவில்லை. இந்நிலையில் தற்போது படத்தைக் கைப்பற்றியுள்ள ஜி 5 நிறுவனம் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக அறிவித்துள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்