ஏஆர் முருகதாஸ் - சல்மான்கான் படத்தின் இன்னொரு நாயகி.. விஜய், அஜித் பட நடிகை..!

Mahendran

செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (12:37 IST)
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் ’சிக்கந்தர்’ என்ற திரைப்படத்தில் ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா நாயகி ஆக நடித்து வருகிறார் என்று செய்தி வெளியான நிலையில் தற்போது அஜித், விஜய் படத்தில் நடித்த முக்கிய நடிகை இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தை இயக்கி வரும் நிலையில் இன்னொரு பக்கம் சல்மான் கான் நடித்து வரும் சிக்கந்தர் என்ற படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சிக்கந்தர் திரைப்படத்தில் சல்மான்கான் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது காஜல் அகர்வால் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்த துப்பாக்கி, ஜில்லா அஜித் நடித்த விவேகம் உள்ளிட்ட படங்களில் நடித்த காஜல் அகர்வால் ஏற்கனவே சில ஹிந்தி படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது சல்மான் கான் படத்தில் நடிக்க உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்