வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (09:21 IST)
இயக்குனர் வெங்கட் பிரபு நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார்.

நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருந்த அருண் விஜய் அந்த படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து அந்த வேடத்தில் ஜீவா அல்லது அரவிந்த் சாமி ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது படத்தில் அரவிந்த் சாமி இருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்த படத்தில் பிரேம்ஜி அமரன், சம்பத் மற்றும் பிரியா மணி ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது இந்த படத்துக்காக மைசூரில் நடந்து வந்த ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்