சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (09:07 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பிரின்ஸ்’  திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. நேற்று திடீரென இந்த திரைப்படத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ‘பிரின்ஸ்’ திரைப் படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் இருபத்தி மூன்று நிமிடங்கள் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தின் நீளம் திடீரென 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த மாற்றமே படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் குறைத்தது.

இந்நிலையில் இன்று வெளியாகி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் விஜய் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதே போல ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்