அண்ணனின் படத்தில் இணைந்த பிரேம்ஜி அமரன்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வெள்ளி, 14 அக்டோபர் 2022 (16:01 IST)
நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஜீவா ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். கடந்த சில ஆண்டுகளாக மார்க்கெட் இல்லாமல் ஜீவா எந்த படமும் நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது வில்லன் வேடத்தை ஏற்க முடியுவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்த படத்தில் பிரேம்ஜி நடிக்க உள்ளதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் பெரும்பாலான படங்களில் பிரேம்ஜி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்