சிவகார்த்திகேயனுடன் இணைவதை சூசகமாக சொன்ன வெங்கட்பிரபு…!

வியாழன், 20 அக்டோபர் 2022 (09:28 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி  வருகிறார்.

இயக்குனர் வெங்கட்பிரபு மங்காத்தா திரைப்படத்துக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து மாநாடு திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளார். அதையடுத்து  இப்போது அவர் நாகசைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்க பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாக சொலல்ப்படுகிறது. வெங்கட்பிரபு நாக சைதன்யா படத்தை இயக்கி முடித்ததும் இந்த படத்துக்கான வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பிரின்ஸ் படத்தின் ப்ரமோஷனுக்காக டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது சிவகார்த்திகேயனிடம் கேள்வி கேட்ட வெங்கட்பிரபு “நாம எப்போ ஷூட்டிங் போகலாம்” எனக் கேட்டார். இதனால் இருவரும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்