உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

Siva

புதன், 9 ஏப்ரல் 2025 (14:00 IST)
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா சந்தித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா சில படங்களையும் இயக்கி உள்ளார் என்பதும், பாலிவுட் திரையுலகிலும் அவரது படங்கள் நல்ல வெற்றியை பெற்றுள்ளது என்பதும் தெரிந்தது.
 
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை பிரபுதேவா சந்தித்து மரியாதை செய்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். மேலும், அவருடன் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான மோகன் பாபு மற்றும் அவரது மகனும் இருந்தனர்.
 
இந்த சந்திப்பு, படப்பிடிப்பு ஒன்றுக்காக உத்தரப்பிரதேசம் சென்ற பிரபுதேவா பட குழுவினருடன் நடந்தது. பிரபுதேவா மற்றும் படக்குழுவினர் முதல்வரிடம் வாழ்த்து பெற்றதாகவும், அதன் பிறகு அவரது படம் குறித்து முதலமைச்சரிடம் பேசியதாகவும் தெரிகிறது.
 
மேலும், பிரபுதேவா, மோகன் பாபு ஆகியோருக்கு யோகி ஆதித்யநாத் நினைவு பரிசுகளையும் வழங்கியுள்ளார் என்பது தகவலாக வெளியாகியுள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரப்பிரதேச மாநில முதல்வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்தபோது, அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் என்பதும், இது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்