எங்க அப்பாவ நெனச்சுதான் சமுத்திரக்கனிய திட்டினேன்.. வனிதா விஜயகுமார் பதில்!

vinoth
திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (07:56 IST)
பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக். இந்த படம் உருவாகி சில ஆண்டுகள் ஆனபின்னும் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது.

நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த் இந்த படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்துள்ளார். படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ப்ரமோஷன்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தில் கொடூரமாக கணவனைத் திட்டி அடிமைப்படுத்தும் பெண்ணாக வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். அது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் “எப்படி அந்த கதாபாத்திரத்தில் நடித்தீர்கள்’ எனக் கேட்டபோது “என் அப்பாவை நினைத்துதான் சமுத்திரக்கனியை திட்டினேன். என் அப்பா ஒரு சிறந்த நடிகர். அவர் ரத்தம்தான் என் உடலில் ஓடுகிறது. எனவே அதை நினைத்துதான் நான் நடித்தேன்’ எனக் கூறி சமாளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்