நாய் சேகர் மொத்த கலெக்‌ஷனே இவ்வளவுதானா?

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (16:48 IST)
வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

கடந்தவாரம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்களை படம் பெரியளவில் திருப்திப் படுத்தவில்லை என்று சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.  இதனால் படம் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் இதுவரையில் தமிழ்நாட்டில் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வாரத்தில அவதார் உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துவிட்டதால், பெரும்பாலான திரையரங்குகளில் நாய் சேகர் தூக்கப்பட்டு விட்டது. அதனால் நாய் சேகர் படம் மேற்கொண்டு பெரிய அளவில் வசூல் செய்ய வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்