ரீ-ரிலீஸான உலகம் சுற்றும் வாலிபன்! – தியேட்டரில் குவிந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (08:39 IST)
திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் எம்ஜிஆரின் “உலகம் சுற்றும் வாலிபன்” டிஜிட்டலில் வெளியானது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகளால் திறக்கப்பட்டுள்ளன. இதனால் நிலுவையில் இருந்த பல புதிய படங்கள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் ஏற்கனவே ஓடிடிக்கு விற்கப்பட்ட படங்களை திரையிட முடியாது என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எம்ஜிஆர் நடிப்பில் 1973ல் வெளியான “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படம் டிஜிட்டல் முறையில் மீண்டும் தயாராகியுள்ளது. இந்த படம் கடந்த வெள்ளி முதல் தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நீண்ட காலம் கழித்து எம்.ஜி.ஆர் படம் ரிலீஸ் ஆவதால் தியேட்டர்களில் குவிந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் போஸ்டருக்கு கற்பூரம் காட்டியும், மேளதாளத்துடனும் உலகம் சுற்றும் வாலிபன் ரீ ரிலீஸை கொண்டாடியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்