சூர்யா பட பாடலுக்கு கண் கலங்கிய சூப்பர் ஸ்டார்

சனி, 4 செப்டம்பர் 2021 (23:29 IST)
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்,  சூர்யா பட பாடலைக்கேட்டு கண்கலங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  

நடிகர் சூர்யா தயாரித்து, நடித்து வெளியான படம் சூரரைப் போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கினார். இப்படத்திற்கு  ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது இப்படம். சமீபத்தில் ஆஸ்திரேலியான் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது.

இந்நிலையில், சூரரைப் போற்று திரைப்படத்தில் இடம்பெற்ற கையிலே ஆகாசம் என்ற பாடலைக் கேட்டுத் தான் உணர்சிவசப்பட்டு கண்கலங்கியதாக இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்