இது தான் 'தல' இதுதான் அவரது பலம்

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (13:50 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த போஸ்டர் வெளியான ஒரு நாளைக்கு ஐந்து மில்லியன் மக்கள் அதாவது 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 
 
27 மணி நேரத்தில் 4 லட்சம் பேர் விசுவாசம் போஸ்டருக்கு லைக் செய்துள்ளனர். Youtube இல் இந்திய அளவில் நம்பர் ஒன் டிரெண்டிங் விசுவாசம் போஸ்டர் தான். விசுவாசம் படத்தில் தூக்குதுரை என்ற கதாபாத்திரத்தில் அஜீத் நடித்துள்ளார். 
 
இந்த தூக்குதுரை மதுரை காவல் தெய்வம் என்பதால், அந்த கதாபாத்திரத்தில் அஜித் நடித்து இருப்பதை மதுரை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். அஜித்தின் ஒரே ஒரு போஸ்டர் வெளியானதையே டுவிட்டரில் கூகுளில், யுடியூபில், பைக் ஸ்டிக்கரில், போஸ்டரில் தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள் டீசர் மற்றும் படம் வெளியானால், அது திருவிழா போல் கொண்டாடுவார்கள் என்றால் அது மிகையல்ல. 
 
அஜித் இப்படிப்பட ரசிகர்களை தனது சுயநலத்துக்காக ஒரு போதும் பயன் படுத்த மாட்டார் என்பதே நிதர்சனம். அதுபோல் எதிர்பார்ப்பு இல்லாத ரசிகர்களே அஜித்தின் பலம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்