எம்.ஐ.டி மாணவர்களுடன் தல அஜித் திடீர் சந்திப்பு

திங்கள், 12 நவம்பர் 2018 (19:37 IST)
ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் போட்டிக்காக நடிகர் அஜித், தக்ஷா குழு மாணவர்களுடன் இணைந்து விமான பயிற்சி எடுத்து வருகிறார்.
நடிகர் அஜித் நடிப்பையும் தாண்டி பைக் ரேஸிங், கார் ரேஸிங் என பல விளையாட்டு போட்டிளிலும் தன் ஆர்வத்தை செலுத்தி வருகிறார். 
 
மேலும் புகைப்படம் மற்றும் சமையல் கலையில் கைதேர்ந்தவர். அத்துடன் கல்லூரி மாணவர்களுக்கு சின்ன விமானம் ஓட்டக் கற்றுத் தருவது என பல விஷயங்களில் தன்னுடைய பங்களிப்பை செலுத்தி வருகிறார். 
 
அந்த வகையில், அஜித்தின் தக்ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் ஒரு போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறது. அதற்காக அஜித்துடன் சேர்ந்து அந்த மாணவர்கள் விமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் தல அஜித் தக்ஷா குழு மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு அறிவுரை கூறுவதற்காக எம். ஐ. டி கல்லூரிக்கு திடீர் வருகை தந்துள்ளார்.இதனால் அந்த கல்லூரி முழுவதும் மாணவர்கள் நிரம்பி விட்டனர்.
 
மாணவர்கள் அனைவரும் அஜித்துடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்