தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான அமைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாகப் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.
நாம்தமிழர் கட்சியில் இணைந்து பின்னர் விலகிய மன்சூர் அலிகான் தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில் இக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலையில் இவர் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
நான் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட நினைத்தேன். ஆனால் அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதால் நான் அவருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு தொண்டாமுத்தூரில் போட்டியிடுகிறேன். அவர் வெற்றி பெற வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
தொண்டாமுத்தூரில் அமைச்சர் வேலுமணியை எதிர்த்து அவர் போட்டியிடவுள்ளார்.