இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம் - கமல்ஹாசன்

வியாழன், 18 மார்ச் 2021 (00:07 IST)
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தமிழக அரசியல்களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது.

அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் பட்டியல் வேகமாக வெளியிட்ட நிலையில் அதே வேகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் முதன் முதலாக சட்டசபைத் தேர்தலில் களமிறங்குகிறார். அவர் கோவை தெற்குத் தொகுதியில் தமது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.

எனவே இன்று இத்தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை சமீபத்தில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி.

எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர்.அதன் காரணமாக கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர். இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்