தனுஷ் பட ரீமேக்கில்... விஜய் பட இசையமைப்பாளர் மாற்றம்!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (18:14 IST)
.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் அசுரன். இப்படம் ரூ.100 கோடு வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் இப்படம் தற்போஒது தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இப்படத்தில் வெங்கடேஷ் தனுஷ் நடித்த ரோலில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியாமணி நடித்துவருகிறார். இப்படம் நரப்பா என்ர பெயரில்  வேகமாக தயாராகிவருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் வெங்கடேசின் பிறந்தநாளை முன்னிட்டு நரப்பா பட டீசர் வெளியிடப்பட்டது. இதில் ஜிவி.பிரகாஷின் இசையே பயன்படுத்தப்பட்டது, இதனால் இப்படத்தின் இசையமைப்பாளர் மணிசர்மா அதிர்ச்சி அடைந்தார்,

இந்நிலையில் இப்படம் வரும் மே மாதம் 14 ஆம் தேதி ரிலீசாகும் எனக்கூறப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் பின்னணி இசை பணிகளுக்கு வேறொரு இசையமைப்பாளரை வைத்து மீதிப் பணிகளை மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

விஜய்யின் போக்கிரி படத்திற்கு  இசையமைத்தவர் மணிசர்மா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்