தலைவர் என்ற வார்த்தைக்கு தகுதியான ஒரே மனிதர்! - சிபி சத்தியராஜ் டுவீட் ‘வைரல் போட்டோ’

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (19:35 IST)
தலைவர் என்ற வார்த்தைக்கு தகுதியான ஒரே மனிதர் என மறைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் சிபி சத்தியராஜ். இதற்கு நெட்டிசன்களால் லைக்குகள் குவிந்து வருகிறது.
இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கு எதிராக , ஈழத்தில் , தமிழர்களுக்கு ஆதரவாக தனி ராஜாங்கமே நடத்தியவர், விடுதலைப் புலிகள் தலைவர்  பிரபாகரன். கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் சிங்க ராணுவத்தினரால் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரை ஈழத்தமிழர்கள் இன்று தங்கள் தலைவராகவே வழிபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் அவருக்கு இன்று பிறந்த நாள் ஆகையால், பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பிரபல  நடிகர் சிபி சத்தியராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ளதாவது :
 
தலைவர் என்ற வார்த்தைக்கு தகுதியான ஒரே மனிதர் என மறைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் போட்டோவை பதிவிட்டுள்ளார் இதற்குப் நெட்டிசன்களால்  லைக்குள் குவிந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்