இந்த ரெண்டு நடிகைகள் தான் என்னுடைய க்ரஷ்...! ஓப்பனாக சொன்ன விஜய்!

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (18:25 IST)
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் உலக அளவில் பேமஸ் ஆன நடிகர் விஜய் தேவரகொண்டா அந்த படத்தை தொடர்ந்து  கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா , நோட்டா , டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்தார். 
 
அண்மையில் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்ட பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய், தனக்கு இரண்டு நடிகைகள் மீது அளவுக்கடந்த கிரஷ் இருப்பதாக கூறினார். அது வேறு யாருமில்லை நடிகை தீபிகா படுகோனே மற்றும் ஆலியா பட் என கூறி இதில் தீபிகாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என வருத்தத்துடன் கூறினார். உடனே அதை கேட்ட தீபிகா படுகோன், ஆலியாவிற்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது என கூறி நக்கலடித்தார். 
ஆலியா பட் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வருகிறார். ரன்பீர் கபூர் தீபிகா படுகோனின் முன்னாள் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்