இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான் என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. அதன் பின்னர் கே ஜி எஃப்-ல் ஷூட்டிங் நடந்தது.
இந்த படம் மூன்று மொழிகளில் வெளியாகும் என தெரிகிறது. மேலும் பல மொழிகளில் டப் ஆகி ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர். சமீபத்தில் விக்ரம் படத்துக்கான ஒத்திகையின் போது காயமடைந்தார். அதனால் ஷுட்டிங் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக படத் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தங்கலான் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.